மீன ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். மனம் மகிழ்ச்சியடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு பெருகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சற்றும் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடக்கும். பயண அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். உங்கள் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் சில தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். விரும்பிய வேலை தேடி வரும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்களை புரிந்துகொள்வீர்கள். மாதம் மீன ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com